Tuesday 29 March 2016

சுவாச தியானம்(Breath Meditation)

சுவாச தியானம் செய்யும் முறை 




தரையிலோ அல்லது நாற்காலியிலோ உங்களுக்கு வசதியான முறையில் அமர்ந்துகொள்ளுங்கள். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக்கொள்ளுங்கள். கண்களை மெதுவாக மூடுங்கள். இப்பொழுது  குணப்படுத்தும் ஒளி(healing light)    உங்கள் தலைக்குமேல் இருப்பதாக கற்பனை செய்யுங்கள். பிறகு அந்த ஒளி மெல்ல உங்கள் தலையில் இறங்கி உடல் முழுவதும் பாய்வதாக  கற்பனை செய்யுங்கள்.

பிறகு மெதுவாக நீண்ட மூச்சை உள்ளிழுங்கள். அந்த மூச்சை மெல்ல வெளியே விடுங்கள். மூச்சை உள்ளே இழுக்கும்போது பிரபஞ்ச சக்தி(cosmic energy) உள்ளே செல்வதாக நினையுங்கள். மூச்சை வெளியே விடும்போது உங்களிடமிருந்து பயமும்,கவலையும் பதட்டமும் வெளியேறுவதாக கற்பனை செய்யுங்கள். இவ்வாறு மூன்று முறை கற்பனை செய்யுங்கள். 
      
பிறகு தொடர்ந்து  நீண்ட மூச்சை மெல்ல உள்ளிழுங்கள், அதை மெல்ல வெளியே விடுங்கள்.    உங்கள் மூச்சின் மீது கவனம் செலுத்துங்கள். வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் உங்கள் மூச்சோடு இணைந்திருங்கள்.  கடவுளின் அன்பையே நீங்கள் சுவாசித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

தியான நேரம் 

இந்த தியானத்தை தினமும் குறைந்தது 20 நிமிடங்களுக்கு செய்யுங்கள். உங்களுக்கு வசதியான  எந்த நேரத்திலும் இந்த தியானத்தை செய்யலாம். 

இந்த மூச்சு தியானத்தை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் உங்கள் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் குணமாகும். இதை நீண்ட நேரம் செய்யும்போது உங்களின் ஆன்ம உடல் உங்களின் ஜட உடலைவிட்டு வெளியே வரும். அப்போது உங்களின் ஜட உடலும்  ஆன்ம உடலும் ஒளியால் ஆன கயிறால் இணைக்கப்பட்டிருக்கும். ஆன்ம உடலின் மூலம் நீங்கள் நினைத்த நேரத்தில் எங்கும் செல்ல முடியும். நீங்கள் தியானத்தை முடிக்கும்போது ஆன்ம உடல் ஜட உடலுக்குள் திரும்பிவிடும். ஆன்ம உடல் வெளியே வந்தால் அதற்காக பயப்பட வேண்டாம். இது இயல்பான ஒன்றுதான். தினமும் இரவு தூக்கத்தில் நம்முடைய ஆன்ம உடல் ஜட உடலை விட்டு வெளியே வந்துகொண்டுதான் இருக்கிறது.


--- விவேக்

No comments:

Post a Comment