Friday 8 April 2016

படைப்பு ஏன்(Why Creation)? - பகுதி 2

இங்கே, அங்கே என்று இருக்கின்ற அனைத்தையும் பிடித்க்க்கொண்டு இல்லாததாக இருக்கிறதையே பலர் கடவுள் என்று கூறுகின்றனர். உண்மையில்  இங்கும் அங்கும் இருக்கிற அனைத்தும் கடவுள்; அவற்றை எல்லாம் பிடித்துக்கொண்டு இருக்கிற இல்லாததும் கடவுள். கடவுள் இருக்கிறதாகவும் இல்லாமல் இருக்கிறதாகவும்(Is/Not is, Am/Not am). காணக்கூடியதும்(Seen) காண முடியாததும்(Unseen) கடவுள்தான். கடவுளன்றி வேறு எதுவும் இல்லை(There is nothing but God). இதுதான் கடவுள் பற்றிய சரியான புரிதல், வரையறை.

எது இருக்கிறதோ, எது காணக்கூடியதோ அதுதான் கடவுள் என்பதும் பிழையானது. எது இல்லாததோ, எதை காண முடியாதோ அதுவே கடவுள் என்பதும் பிழையே. கடவுள் இல்லாத ஒன்று இருக்கிறது என்பதையே இந்த இரண்டு பிழையான கருத்துக்களும் கூறுகின்றன. காணக்கூடியது மட்டும்தான் கடவுள் என்றால் காணமுடியாதது கடவுள் இல்லை என்றாகிறது. இந்த கூற்றுப்படி, கடவுள் இல்லாத ஒன்று காண முடியாததாக  இருக்கின்றது என்றாகும். அதேபோல, காணமுடியாதது மட்டுமே கடவுள் என்றால் காணக்கூடியது கடவுள் இல்லை என்றாகிறது. இந்த கூற்றுப்படி, கடவுள் இல்லாத ஒன்று காணக்கூடியதாக இருக்கின்றது என்றாகும். காண முடியாதது கடவுள் அல்ல என்பதும், காணக்கூடியது கடவுள் அல்ல என்பதும் பிழையான கருத்துக்கள். கடவுள் இல்லாத எதுவும் இல்லை(There is nothing God is not). இதுதான் யதார்த்தம்(reality). இதுதான் ஒரேயொரு யதார்த்தம்(Single Reality); இறுதி யதார்த்தம்(Ultimate Reality); கடைசி யதார்த்தம்(Final Reality).





இங்கே, அங்கே என்பதை படைத்ததினால் கடவுள் தன்னையே அனுபவித்து அறிந்து கொள்வது சாத்தியமானது. கடவுள் தனக்குள்ளேயே பெரிய வெடிப்பை நிகழ்த்தி(explosion) சார்பியலை படைத்தது(relativity); சார்பு உலகத்தை படைத்தது(relative world). அதன்மூலம் இருமை என்பதும் உறவு என்பதும் இருப்புக்கு வந்தன. இந்த சார்பு உலகத்தில் ஒன்றோடு ஒன்று எப்பொழுதும் சார்ந்தே இருக்கும், நடக்கும். இடம், பொருள், காலம், நிகழ்வு என்று எதுவாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று சார்ந்தே அமையும்.  கடவுள் தனக்கு உள்ளேயே நிகழ்த்திய இந்த வெடிப்பைத்தான் அறிவியலார்கள் பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான பெரு வெடிப்பு என்கிறார்கள்(Big Bang).  இந்த மகத்தான வெடிப்புக்கு பிறகு இல்லாததிலிருந்து இருக்கிற அனைத்தும் படைக்கப்பட்டது. இல்லாதது என்பது கடவுள் தான். அறிய முடியாத ஆற்றலாக இருப்பதால் அதை இல்லாத நிலை எனலாமே தவிர அது எப்பொழுதும் அந்த நிலையிலேயே இருக்கிறது. சில மதங்கள் கடவுள் எல்லாவற்றையும் இல்லாததிலிருந்து படைத்தார் என்று கூறினாலும் அவர் தான் அல்லாத, தனக்கு வெளியே இந்த பிரபஞ்சத்தை ஒன்றும் இல்லாததிலிருந்து படைத்தார் என்றுதான் கூறுகின்றன. அது பிழையான கருத்து.



இவ்வாறு பெரு வெடிப்பு நிகந்தவுடன் தனிமங்கள் எல்லா திசைகளிலும் அதிவேகமாக சிதறி ஓடின. இப்படி அவை ஓடியதால் காலம் படைக்கப்பட்டது. ஒரு பொருள் முதலில் இங்கே இருந்தது ; பிறகு அது அங்கே இருந்தது; இங்கிருந்து அங்கு செல்வதற்கு அது எடுத்துக்கொண்ட  நேரம் கணக்கிடக்கூடியது என்று காலம் இருப்புக்கு வந்தது. கடவுளின் காணக்கூடிய பகுதிகள் தங்களுக்குள் ஒன்றையொன்று தொடர்பு படுத்தி தங்களை வரையறை செய்துகொள்ள தொடங்கின. அதேபோல், கடவுளின் காணமுடியாத பகுதிகளும் தங்களை வரையறை செய்துகொள்ள தொடங்கின.
காணக்கூடியது, காண முடியாதது என்று பிரபஞ்சத்தை பிரித்து, சுத்தமான ஆற்றலில் இருந்து இப்பொழுது இருக்கிற காணக்கூடிய, காண முடியாத அனைத்தையும் கடவுள் படைத்தது. அதாவது, பௌதீக பிரபஞ்சம்(Physical universe) மட்டும் படைக்கப்படவில்லை. பௌதீகத்திற்கு மேலான பிரபஞ்சமும்(Metaphysical universe) படைக்கப்பட்டது. இதுதான் இருக்கிறேன்/இல்லாமல் இருக்கிறேன்(Am/Not am) என்கிற சமன்பாடு. இந்த சமன்பாட்டின் முதல் பாதி தான் காணக்கூடிய பௌதீக பிரபஞ்சம். அதன்  இரண்டாம்  பாதி தான் காணமுடியாத பௌதீகத்திற்கு மேலான பிரபஞ்சமும். கடவுளின் அங்கமான சமன்பாட்டின் முதல் பாதி வெடித்தது போலவே, இரண்டாம் பாதியும் வெடித்தது. அதிலிருந்து முழுமையை விட சிறிய எண்ணற்ற ஆற்றல் அலகுகள்(energy units) படைக்கப்பட்டன. இவைகளைத்தான் நாம் ஆவிகள்(spirits) என்று கூறுகிறோம்  சமன்பாட்டின் முதல் பாதி ஜட உலகம்(material world). அதன் இரண்டாம் பாதி ஆவி உலகம்(spirit world). இதுவே சார்பு உலகம்(relative world) .

--- தொடரும்

--- விவேக்

Wednesday 6 April 2016

படைப்பு ஏன்(Why Creation)? - பகுதி 1

காலம் உருவானதற்கு முன் காலம் இருந்தது. அது காலம் இல்லாத காலம். அது ஆரம்பமோ முடிவோ அற்றது. அது சுத்த உலகம்(absolute world). அது ஒருமைத்துவம்(singularity). அதில் எல்லாமே ஒன்றுதான். அந்த ஒன்றைத்தவிர வேறு எதுவும் இல்லை. இருப்பதுவே இருந்த அனைத்துமாக இருந்தது(That which IS, was all there was).



வேறு எதுவும் இல்லாததால் அனைத்துமாக இருக்கிற அதனால் தன்னை அறிந்துகொள்ள முடியவில்லை. மற்ற வேறு எதுவும் இல்லை என்ற நிலையில், இருக்கிறதும் இல்லாத ஒரு நிலைதான். அந்த வகையில் இருக்கிறதும் இல்லாததாகவே இருந்தது. இருக்கிறது, ஆனால் இல்லை என்பதே நிலை. இதுவே  இருக்கிறது/இல்லாததாக (Is/Not is)இருக்கிறது என்பது.

நானே அனைத்துமாக இருக்கிறேன், என்னில் அனைத்தும் இருக்கிறது, தனக்கு வெளியே என்று எதுவும் இல்லை என்று அனைத்துமாக இருப்பது அறிந்து கொண்டது. அது அவ்வாறு தன்னை அறிந்து கொண்டது எண்ண ரீதியாகவே(conceptually). அனுபவ ரீதியாக(experientially) அல்ல. அனுபவ ரீதியாக அதனால் எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை. எதையும் எண்ண ரீதியாக அறிந்துகொள்வதும் அனுபவ ரீதியாக அறிந்துகொள்வதும் வேறானவை. எனவே அது தன்னை அனுபவப்பூர்வமாக அறிந்துகொள்ள விரும்பியது. முக்கியமாக, தான் மகத்துவமாக இருப்பதை எண்ண ரீதியாக அறிந்ததை அனுபவித்து அறிய அது விரும்பியது. தன்னுடைய மகத்துவத்தை தானே அனுபவிக்கும்போது அது எப்படி உணரும் என்பதை அறிய அது மிகவும் ஆவல் கொண்டது. இருப்பினும் அதுவே அனைத்துமாக இருப்பதினால், எதையும் அனுபவித்து அறிந்துகொள்வது சாத்தியமற்றதாக இருந்தது. ஏனெனில் ஒன்றை அனுபவபூர்வமாக தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்கு நேர்திரான ஒன்றின் மூலமே அது சாத்தியம். ஒன்றின் மூலமாகத்தான் அதற்கு நேரெதிரான மற்றொன்றை பற்றி அனுபவம் மூலம் அறிய முடியும். இல்லாதது இல்லாத நிலையில் இருப்பதுவும் இல்லாததுதான்(In the absence of that which is not, that which is, is not).

நானே அனைத்துமாக இருக்கிறேன், என்னை தவிர வேறு எதுவும் இல்லை, எனக்கு வெளியே என்று ஒரு இடம், வெளி என்கிற எந்த ஒரு புள்ளியும் கிடையாது என்பதை அனைத்துமாக இருப்பது சரியாக அறிந்துகொண்டது. எனவே தனக்கு வெளியே ஒரு புள்ளியில் இருந்துகொண்டு தன்னை அனுபவ   ரீதியாக அறிந்துகொள்ள தன்னால் எப்பவுமே முடியாது என்று அதற்கு தெரிந்தது. ஏனென்றால் அதுக்கு வெளியே ஒரு புள்ளி என்று எதுவும் இல்லை. வெளியே என்கிற சாத்தியம் இல்லாத பட்சத்தில், தனக்கு உள்ளேயே ஒரு குறிப்பிட்ட புள்ளியை(reference point) நிர்ணயித்துக் கொள்வதின் மூலம் மட்டுமே இப்படி ஒரு புள்ளி இருக்க முடியும் என்று அது அறிந்து கொண்டது. அந்த புள்ளிதான், இருக்கிறது/இல்லாமல் இருக்கிறது(Is/Not is), இருக்கிறேன்/இல்லாமல் இருக்கிறேன்(Am/Not am) என்பதாகும்.






நம்முடைய ஜட  புலன்களுக்கு புலப்படாத, அனைத்துமாக இருக்கிற சுத்தமான ஆற்றல், தனக்கு உள்ளேயே ஒரு குறிப்பிட்ட புள்ளியை பயன்படுத்துவதன் மூலம் தான் எதுவாக எல்லாம் இருப்பதாக எண்ண ரீதியாக அறிகிறதோ அதை எல்லாம் அனுபவித்து அறிந்து கொள்ள முடியும் என்று உணர்ந்தது. தன்னுடைய மகத்துவத்தை அனுபவ பூர்வமாக பார்த்து அறிய வேண்டுமென்றால், தன்னுடைய முழுமையை(whole) விட சிறிய தன்னுடைய பாகங்கள் (portions) தன்னுடைய மீதி பகுதியான முழுமையை பார்த்து அதின் மகத்துவத்தை அனுபவ ரீதியாக உணர முடியும் என்று அதற்கு தெரிந்தது.

எனவே அனைத்துமாக இருக்கிற ஆற்றல் தன்னையே பல எண்ணற்ற பாகங்களாக பிரித்துக்கொண்டது. இப்படி பிரித்ததால் முழுமை எந்த வகையிலும் சிறியதாகவில்லை. அது அப்படியே இருந்தது. ஒரே நேரத்தில் முழுமையும் இருப்பு கொண்டிருந்தது; அதைவிட சிறியதான அதன் பாகங்களும் இருப்பு கொண்டிருந்தன. அனைத்துமாக இருக்கும் ஆற்றல் தன்னையே தனித்தனியாக பல பாகங்களாக வெட்டி தன்னை பிரித்துக்கொள்ளவில்லை. அப்படி செய்வதும் சாத்தியமில்லை. அது தன்னை வெட்டி தனக்கு வெளியே என்று தன்னுடைய பாகத்தை தனியாக பிரிக்க முடியாது. ஏனென்றால் அதற்கு வெளியே என்று எந்த புள்ளியும் இல்லை. அது தனக்கு உள்ளேதான் எதையும் செய்ய முடியும். முழுமையானது தனக்கு உள்ளேயே தனித்துவப்படுத்துவதின்(Individuation) மூலமாக பல       எண்ணற்ற பாகங்களை ஏற்படுத்தியது. ஒவ்வொரு பாகமும் முழுமையிலிருந்து தனியாக பிரியாமல்  அதின் ஒரு பகுதியாக என்றும் இருக்கும். ஆகவே பாகங்கள் ஒவ்வொன்றும் முழுமையின் தனித்துவப்படுத்தப்பட்ட பகுதியே(individuated part) அன்றி அதிலிருந்து தனியாக பிரிக்கப்பட்ட பகுதி(individual part) அல்ல.
  
முழுமையின் மெய்யுணர்வு(consciousness) எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது. அதேசமயம் அதன் ஒவ்வொரு பாகத்துக்கும் தனித்தனி சொந்த மெய்யுணர்வு(individual own consciousness) கொடுக்கப்பட்டது. அதன்மூலம் பாகங்கள் அனைத்திற்கும் சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரம்(free will) தரப்பட்டது. இப்படி பாகங்களுக்கு தனி மெய்யுணர்வு வழங்கப்பட்டிருந்தாலும் அது முழுமையின் மெய்யுணர்வோடு எப்பொழுதும் ஒன்றர கலந்தே இருக்கும். ஏனென்றால் மெய்யுணர்வு தனியாக பிரிக்கப்பட்டது அல்ல(individualized); மாறாக அது தனித்துவப்படுத்தப்பட்டதே(individuated). ஒப்பீட்டுக்கு, அனைத்துமாக இருக்கும் ஆற்றலை கடல் என்றும்  அதன் பாகங்கள் கடல் நீரே கடலின் ஒரு பாகமாக தோன்றி நிலைத்திருக்கும்   நீர்க்குமிழ்கள் என்றும் கூறலாம்.

அனைத்துமாக இருப்பது தன்னையே பல பாகங்களாக பிரித்தபோது, முதன்முறையாக ஒன்றிலிருந்து இன்னொன்று வேறாக இருக்கிற இது, அது என்பது இருப்புக்கு வந்தது. அதுவரை எல்லாமே  ஒன்றாக(singularity) இருந்தது. இது, அது என்று தனித்  தனியானவைகள் இருப்புக்கு வந்தபோதும், இந்த இரண்டுமே அல்லாத, எல்லாமுமாக இருப்பது அப்படியே இருந்தது. இந்த விதமாக, இங்கே இருப்பது, அங்கே இருப்பது, இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் எங்கும் எல்லாமுமாக இருப்பது என்ற மூன்று கூறுகள் இருப்புக்கு வந்தன. இங்கேயும் அங்கேயும் இல்லாமல் எங்கும் இருப்பது இருந்தால்தான் இங்கே இருப்பதும் அங்கே இருப்பதும் இருப்பு கொள்ள முடியும். அதாவது, இல்லாததுதான் இருக்கிற எல்லாவற்றையும் ஒன்றாக பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறது.

--- தொடரும்


--- விவேக்